ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் பிரசவத்திற்காக 7 கிமீ தூரம் சுமந்துசெல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண்
கேரளாவில் பாலக்காடு பகுதியில் உள்ள ஒரு மலைக்கிராமத்திலிருந்து மருத்துவமனைக்கு 7 கி.மீ தூரம் கர்ப்பிணிப் பெண்ணை தற்காலிக ஸ்ட்ரெச்சரில் நடந்தே சுமந்து சென்ற சம்பவம் கேரளாவில் நேற்று நடந்துள்ளது. அட்டப்பாடி, அவசரம் ஆபத்துக்கு என்று ஒரு ஆம்புலன்ஸ் வசதி பெறமுடியாத மிகவும் பின்தங்கிய மலைக்கிராமம். கர்ப்பிணிப் பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் சூழ்நிலை ஒன்று ஏற்பட்டபோது இங்குள்ளவர்கள் அதற்காக சோர்ந்துவிடவில்லை.
மரக் கிளைகளை வெட்டி அதன்மீது போர்வையை இறுக்கக் கட்டி ஒரு தற்காலிக ஸ்ட்ரெக்சர் படுக்கையை உருவாக்கிக்கொண்டனர். அதன்மீது கர்ப்பிணிப் பெண்ணை படுக்க வைத்துள்ளனர். தற்காலிக ஸ்ட்ரெச்சரில் கர்ப்பிணியை சுமந்துகொண்டு கிட்டத்தட்ட 7 கி.மீ தூரம் மலைப்பாதைகளில் இவர்களின் நடைப்பயணம் அமைந்தது.
சற்றுத் தொலைவில் உள்ள கொட்டாதாரா பழங்குடி மக்களுக்கான மருத்துவமனைக்கு இப்பெண்ணை அவர்கள் கொண்டு சென்றனர். அங்கு அப்பெண் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
தற்காலிக ஸ்ட்ரெச்சரில் நெடுந்தொலைவு நடந்தே கர்ப்பிணிப் பெண்ணை தூக்கிச் சென்ற சம்பவம் நேற்று கேரள தொலைக்காட்சிகளில் வலம் வந்ததோடு சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர் என்றும் தகவல்கள் பரிமாறப்படுகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply