அல்கைதாவின் நிதி ஒருங்கிணைப்பாளர் ஜெர்மனியில் கைது

மலேசியாவில் பணியாற்றி வந்த அல்கைதா அமைப் பின் நிதி ஒருங்கிணைப்பாளர், ஜெர்மனியில் கைது செய்யப்பட்டார். மலேசியாவின் பகாங் மாகாணத்தில் உள்ள கார் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் பொறியியலாளராக பணியாற்றியவர், ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார். 31 வயதான இவர், துருக்கி வம்சாவளியைச் சேர்ந்தவர். ஜெர்மன் குடியுரிமை பெற்றுள்ளார். இவர் தகுந்த பணி அனுமதிபெற்று, மலேசியா வின் பகாங் மாகாணத்தில் உள்ள கார் உற்பத்தி தொழிற் சாலையில் 2005ம் ஆண்டு முதல் பணிபுரிந்துள்ளார்.

அதே நிறுவனத்தில் பணி புரிந்த மற்றொரு வெளிநாட் டவர் மூலம் இவருக்கு வேலை கிடைத்துள்ளது. இவர் சர்வதேச பயங்கர வாதி ஒசாமா பின்லாடனின் அல்கைதா, ஜமா இஸ்லா மியா மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி களை அனுப்பும் பணியை மேற்கொண்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply