இப்தார் நிகழ்வு மத நல்லிணக்கத்துக்கு சிறந்த எடுத்துக் காட்டு : ஜனாதிபதி
அரசாங்கம் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பில் முன்னெடுக்கும் நடவடிக்கைக்கு இப்தார் நிகழ்வு சிறந்த முன்னுதாரணம் ஆகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.நேற்று ஜனாதிபதியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் கூறியுள்ளார்.
இந்நிகழ்வில் முஸ்லிம் புத்தஜீவிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது, முஸ்லிம் தலைவர்களும் புத்திஜீவிகளும் ஜனாதிபதியினால் முன்னெடுத்துச் செல்லும் நல்லிணக்க முயற்சியை பாராட்டியதாகவும் ஜனாதிபதி செயலகம் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply