செவ்வாய் கிரகத்தை தாக்கும் புழுதி புயல் – படம் பிடிக்க தயாராக இருக்கும் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம்

செவ்வாய் கிரகத்தில் தூசு புயல் வீசவுள்ளதாக நாசா தகவல் வெளியிட்டு உள்ளது. வட அமெரிக்க கண்டத்தை விடவும் விசாலமான பரப்பில் இந்த புயல் வீசவுள்ளது. சுமார் 18 மில்லியன் சதுர கிலோ மீட்டர்கள் வரை பரவக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தற்போது புயல் வீசுவதற்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை அங்கு புயல் வீசும் என நாசா கூறியுள்ளது.__

 

இந்த புயலை செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்து வரும் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் படம் பிடிக்கும் எனவும், அந்த புயலினால் அதன் செயற்பாடுகளும் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply