சட்டவிரோத துப்பாக்கிகள் நான்குடன் ஆறு பேர் கைது
மொனராகலை, எதிமலே கொட்டியாகல பிரதேசத்தில் எதிமலே பொலிஸாரால் நேற்று இரவு நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் நான்கு உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கிகளை சட்டவிரோதமாக வைத்திருந்த 06 பேர் எதிமலே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் மிருக வேட்டைக்கான இந்த ஆயுதங்களை வைத்திருந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதென்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்கள் நீண்ட காலமாக இந்த துப்பாக்கிகளை பயன்படுத்தி பிரதேசத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசங்களில் மிருக வேட்டையில் ஈடுபட்டு விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு பல முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
அதன்படி இந்த சுற்றிவளைப்பில் துப்பாக்கிகளும் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் இன்று சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply