வடகொரிய தலைவர் கிம்முக்காக சிங்கப்பூருக்கு சென்ற விசேஷ கழிவறை
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் வடகொரிய தலைவர் கிம்ஜாங்கும் சிங்கப்பூரில் நேற்று முன்தினம் சந்தித்து வரலாற்று சிறப்புமிக்க பேச்சு நடத்தினார்கள்.இதன்மூலம் இரு நாடுகள் இடையேயான போர் பதட்டம் தணிந்தது. இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பில் டிரம்பை விட உலக மக்களால் வடகொரிய அதிபர் கிம்தான் அதிகம் ஈர்க்கப்பட்டார். ஏனெனில் கிம் பற்றி உலகம் அறியாத ரகசியங்கள் சில வெளியாகி உள்ளது.
டிரம்ப்பை விட கிம்முக்குத்தான் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. அவர் யாரிடம் எங்கு, எந்த அறையில் பேச வேண்டும் எனபன முன்பே துல்லியமாக திட்டமிடப்பட்டன.
அவருக்கு 2 விமானங்கள் மற்றும் கப்பலில் விசேஷ உடைகளும், கொரிய உணவு வகைகளும் கொண்டு செல்லப்பட்டன. தனது உடல் நிலையை யாரும் அறிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக விசேஷ கழிவறையும் சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதைத்தான் கிம் பயன்படுத்தினார்.
மேலும் இந்த சந்திப்புக்கு முன்பு தான் கொல்லப்படலாம் என்ற அச்சமும் கிம்மிடம் இருந்ததாகவும், இதன் காரணமாகவே அவர் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply