மகிந்தவும் மைத்திரியும் விரைவில் இணைவார்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரசிங்க போட்டியிட்டால், அவரை எதிர்த்து போட்டியிடும் எந்த வேட்பாளராக இருந்தாலும் வெற்றி பெறுவதில் அவருக்கு தடையிருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோன் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் இணைந்த விதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இணைந்துகொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிடும் வேட்பாளரை தவிர வேறு எந்த கட்சியின் வேட்பாளராக இருந்தாலும் அவருக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்த கூட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply