வடகொரியா அதிபரை ரஷியா வருமாறு விளாடிமிர் புதின் அழைப்பு

எலியும் பூனையுமாக கடந்த பல ஆண்டுகளாக இருந்த அமெரிக்கா – வடகொரியா சமீபத்தைய சிங்கப்பூர் சந்திப்புக்கு பின்னர் நண்பர்களாக மாறியுள்ளது. ஏவுகணை மனிதர் என டிரம்ப்பால் விமர்சிக்கப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், கடந்த 12ம் தேதி சிங்கப்பூரில் டிரம்பை சந்தித்து பேசினார்.__

 

அப்போது செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், கிம் ஜாங் அன் சிறந்த மனிதர் என்றும், இருப்பினும் ஒருசில காரணங்களுக்காக வடகொரியா மீதான பொருளாதார தடைகள் தொடர்வதாக தெரிவித்தார்.

 

 

இந்நிலையில், வடகொரியாவின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான கிம் யோங் நம்-மை ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் சமீபத்தில் சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு உறவுகள் குறித்து அவர்கள் பேசியதாக தெரிகிறது. அப்போது டிரம்ப் – கிம் சந்திப்பு குறித்து புதின் தனது மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டார்.

 

இந்த சந்திப்பின்போது கிம் ஜாங் அன்-னை சந்திக்க விரும்புவதாக கிம் யோங் நம்-யிடம், புதின் தெரிவித்துள்ளார். புதின் மற்றும் கிம் இடையேயான சந்திப்பு வரும் செப்டம்பர் மாதம் நடைபெறலாம் எனவும், இதற்கான அறிவிப்புகளை விரைவில் இருநாடுகளும் வெளியிடலாம் எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply