பாகிஸ்தான் அட்டூழியம் – சீக்கியரின் தலைப்பாகையை கழற்ற வைத்து அவமதிப்பு

பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் வசித்து வருபவர் குலாம் சிங். தியரா சாஹால் பகுதியில் காவல் துறை அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். அவர் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் குடியிருந்து வருகிறார். அவருடன் மனைவி, குழந்தைகளும் வசித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று அறக்கட்டளை நிர்வாகி ஆசிப் அக்தர் ஹஸ்மி என்பவர் அங்கு வந்தார். உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும் என குலாம் சிங்கிடம் கூறியுள்ளார்.

மேலும் அவரை கட்டாயப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றினார். தனது அடியாட்களுடன் வந்த அவர் குலாம் சிங் தலைப்பாகையை அகற்றினார். சீக்கிய மத நம்பிக்கையை அவதிக்கும் வகையில் நடந்துகொண்டார்.

இதுதொடர்பான புகைப்படங்களை குலாம் சிங் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவேற்றம் அங்கு வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து குலாம் சிங் கூறுகையில், வீட்டுக்குள் நுழைந்து எனது தலைப்பாகையை வலுக்கட்டாயமாக அகற்றினர். எனது மத உணர்வை அவர்கள் மதித்ததாகவே தெரியவில்லை. பாகிஸ்தானில் சீக்கியர்களை எப்படி மதிக்கின்றனர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என பதிவிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply