அமெரிக்க இராணுவத்தைவிட திறமை படைந்த இலங்கை இராணுவம்
வன்னியை முழுமையாக விடுவிக்கும் நோக்கில் வெற்றிகரமாக முன்னேறிவரும் இலங்கை அரசாங்கப் படைகள் அமெரிக்கப் படைகளைவிட திறமை படைத்தவர்கள் என சுற்றாடல்வளத்துறை அமைச்சர் பாட்டலே சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.
அமெரிக்கப் படையினர் ஆப்கானிஸ்தானில் கொரில்லாக் குழுக்களுக்கு எதிராகப் போராடுவதைக்காட்டிலும் இலங்கைப் படையினர் திறமையாக மோதல்களை முன்னெடுத்து வருகின்றன என நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு-செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டபோது அமைச்சர் தெரிவித்தார்.
தலிபான் கொரில்லாப் போராளிகளை ஒழிப்பதற்கு அமெரிக்கா ஒதுக்கியிருக்கும் 350 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி வெற்றியளிக்கவில்லையெனவும், ஆட்லறித் தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல்களைக் கொண்டே விடுதலைப் புலிகளை வெற்றிகரமாக இலங்கை அரசாங்கப் படைகள் தோல்வியடைச் செய்துவருவதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
தமிழீPழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை அழிக்கமுடியாத போர் கடவுள் என சில சக்திகள் காண்பித்து வருகின்றபோதும், அரசாங்கப் படைகள் அவற்றை பொய்யாக்கிக் காண்பித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“கிளிநொச்சி முன்னரங்கப் பகுதிகளில் எந்தவிதமான எதிரப்புக்களைச் சந்தித்தாலும் பூநகரியை மீட்கும் நோக்கில் அரசாங்கப் படைகள் வெற்றிகரமாக முன்னேறிவருகின்றன. வெற்றிகளைப் பெற்றுத்தரும் இராணுவ ரீதியான கொள்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்” என அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறினார்.
பொதுமக்களை கேடயங்களாகப் பயன்படுத்தும் விடுதலைப் புலிகள் அப்பகுதி மக்களை அங்கிருந்து வெளியேற அனுமதிக்காதபோதும், அரசாங்கப் படைகள் அவதானமாக பொதுமக்களைப் பாதிக்காதவகையில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, பூநகரி அரசாங்கப் படைகளால் விரைவில் கைப்பற்றப்பட்டுவிடும் எனத் தெரிவித்திருக்கும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷனயாப்பா, அதற்கான காலவரையறையைக் குறிப்பிட்டுக் கூறமுடியாது எனக் கூறியுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply