மரண தண்டனை கைதிகள் 18 பேரில், 4 பேர் பாகிஸ்தானியர், 2 பெண்கள்
_போதைப் பொருள் வியாபாரம் தொடர்பில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட்டு எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.__
மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள பாரிய போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 18 பேர் காணப்படுவதாகவும் அவர்களது பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த 18 பேரில் 4 பாகிஸ்தானியர்களும் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இவர்களிடையே இருபெண்களும் காணப்படுவதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் கூறியுள்ளன.
இதேவேளை, தூக்குத் தண்டனை நிறைவேற்றும் அதிகாரியான அளுகோசுவன் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply