தமிழ் மக்கள் பிரிவினையைக் கோரவில்லை; புலிகளைத் தோற்கடிப்பதற்கு உள்ள ஒரேவழி அரசியல் தீர்வு : பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி

புலிகளைத் தோற்கடிப்பதற்கு உள்ள ஒரேவழி யுத்தத்தின் மூலம் தோற்கடிப்பதல்ல. தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வினைக் கொடுப்பது தான். தமிழ் மக்கள் பிரிவினையைக் கோரவில்லை. அவர்களுக்கென்று அபிலாசைகள் இருக்கின்றன. அந்த அபிலாசைகள் அரசியல் ரீதியாகவே தீர்க்கப்பட வேண்டியவை. அவ்வாறான ஒரு தீர்வுத் திட்டம் இல்லாமல் அதனை முன்வைக்காமல் தமிழர்களை திட்டுவதில் பயனில்லை. சிங்கள -தமிழ் அரசியல் இணைவுக்கு அரசாங்கம் முன்வைக்கும் ஏற்பாடு என்ன? கலாசார இணைவுக்கு அல்ல. அரசியல் இணைவுக்கு அது எதனை முன்வைக்கிறது?

புலிகளின் பின்னான காலப்பகுதியைப் பற்றிப் பேசுவது உண்மையில் சாத்தியமானது தானா? வேண்டுமானால் கிளிநொச்சிக்குப் பின்னான காலப்பகுதி என்று பேசலாம். ஆனாலும் கிளிநொச்சியிலும் முழுமையாகப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்களா? மட்டக்களப்பிலும் அவ்வாறு தான் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால் இன்று நிலைமை அவ்வாறில்லை

நீங்கள் சொல்கிறபடி கிளிநொச்சிக்குப் பின்னரான இந்தக்காலப்பகுதி ஒரு வகையில் நல்லது. எந்தவகையிலென்னறால் அரசாங்கம் எல்லாத் தரப்பினரையும் இணைத்து சிங்களவர்களுடைய ஏற்புடன் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை அரசியலமைப்பு மாற்றம் ஒன்றின் ஊடாக வழங்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இது நடைபெறுகின்றதா என்று பொறுத்திருந்து பார்ப்போம் என ஜிரிஎன் இணையத்துக்கு தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply