நம்பிக்கையில்லா தீர்மானம் – பா.ஜ.க அரசு வெற்றி

_மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் இன்று காரசாரமான விவாதம் நடைபெற்றது.  சிவசேனா, பிஜு ஜனதா தளம் விவாதத்தை கட்சிகள் புறக்கணித்த நிலையில், காங்கிரஸ் கட்சி மத்திய அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததால் அவையில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. __

 

விவாதத்தின் இறுதியாக பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பதிலளித்தும், எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தும் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ஆவேசத்துடன் பேசினார்.

 

 

இதைத்தொடர்ந்து மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு 11 மணியளவில் தொடங்கியது.

 

 

சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அவையில் குரல் வாக்கெடுப்பு நடத்தினார். அதில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.

 

 

முதலில் நடைபெற்ற குரல் வாக்கெடுப்பை தொடர்ந்து மின்னனு முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி அவையில் இருந்த 451 உறுப்பினர்கள் தீர்மானத்தின் மீது வாக்களித்தனர். அதில் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக 325 பேரும், தீர்மானத்துக்கு ஆதரவாக 126 பேரும் வாக்களித்தனர்.

 

 

இதனால், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவையை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவையை திங்கள் வரை ஒத்திவைத்தார்.

 

 

தீர்மானத்தின் போது உறுப்பினர்கள் யாரும் நடுநிலை வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply