பாதுகாப்பை சீர்குலைத்தவர்கள் இப்போது கிராமங்களையும் சீர்குலைக்க முயற்சி

நாட்டின் பாதுகாப்பை சீர்குலைத்து, முழு நாட்டையும் சீர்குலைத்தவர்கள், இப்போது கிராமங்களையும் சீர்குலைக்க ´கம்பெரலிய´ வேலைத்திட்டத்தை முன்னெடுக்கிறார்கள் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.மேலும், கிராமங்களில் மீதமுள்ள கலாச்சாரத்தையும் மண்வெட்டி கொண்டு அகற்ற பார்க்கிறார்கள் எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

நுவரெலியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நேற்று (22) கலந்து கொண்டு உரையாற்றும் போதே, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் பாதுகாப்பு செயலாளர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வௌிநாட்டவர்கள் கூட ஆச்சர்யப்படும் அளவில் குறுகிய காலத்திற்குள் அபிவிருத்தி திட்டங்களை மிக வேகமாக முன்னெடுத்தார்.

1970 ஆம் கலவரம் ஒன்று வெடித்ததற்கு காரணம் கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படாத காரணத்தால். அதனால் தான் துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை கஷ்டப் பிரதேசங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும், எந்த ஒரு நாட்டிற்கும் இரண்டாவது விமான நிலையம் ஒன்று அவசியம். இது ஜே.ஆர். ஜயவர்தனவின் காலத்தில் இருந்தே உணரப்பட்ட ஒரு விடயம். ஆனால் அதை நடைமுறைபடுத்த மஹிந்த ராஜபக்ஷவினால் மட்டுமே முடிந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply