தென் கொரியாவில் ஊழல் புகாரில் சிக்கிய எம்.பி. தற்கொலை

தென் கொரியா நாட்டில் ஜஸ்டிஸ் கட்சியின் எம்.பி.யாக இருந்தவர் ரோக் ஹோ சான். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. அவர் சட்ட விரோதமாக செயல்படுவதற்காக அரசியல் தர ரூ. 30 லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.இதேபோல் மேலும் பல அரசியல் பிரமுகர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக தென் கொரியா புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வந்தனர். ரோக் ஹோ சானிடமும் விசாரணை நடத்த இருந்தனர்.இந்த நிலையில் ரோக் ஹோ சான் குடியிருந்த அடுக்கு மாடி வீட்டில் பிணமாக கிடந்தார். அவர் 3 கடிதங்களை எழுதி வைத்திருந்தார்.

அதில், நான் லஞ்சம் பெற்றது உண்மை. நான் தவறு செய்து விட்டேன். எனவே, எனது வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என்று எழுதப்பட்டு இருந்தது.

இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதை போலீசார் உறுதி செய்து கொண்டனர். ஆனால், அவர் எப்படி தற்கொலை செய்து கொண்டார்? என்ற விவரத்தை போலீசார் வெளியிடவில்லை.

ரோக் ஹோ சான் ஜஸ்டிஸ் கட்சியில் 3 முறை எம்.பி.யாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply