பொதுத்தேர்தலில் வென்று பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்குள் நுழைய உள்ள முதல் இந்து
பாகிஸ்தானில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணி நடந்து வருகிறது. இம்ரான்கானின் பிடிஐ கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றும், அதிக இடங்களில் முன்னிலை வகித்தும் வருகிறது. இதனால், இம்ரான்கான் பிரதமராக உள்ளார். இந்நிலையில், சிந்து மாகாணத்தில் உள்ள தார்பார்கர் தொகுதியில் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்து மதத்தை சேர்ந்த மகேஷ் மலானி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், அந்நாட்டு பாராளுமன்ற தேசிய சபை (கீழ்சபை) தேர்தலில் போட்டியிட்டு வென்ற முதல் இந்து என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.__
இதற்கு முன்னர், பல இந்து எம்.பி.க்கள் தேசிய சபையில் இருந்தாலும் அவர்கள் அனைவரும் நியமன எம்.பி.க்கள் ஆவர். தற்போது, மகேஷ் மலானி தேர்தலில் நின்று வெற்றி பெற்று தேசிய சபைக்குள் செல்ல இருக்கிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply