கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத்தீ – 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் ரெட்டிங் என்ற பகுதிக்கு மேற்கே 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில் இங்கு வியாழக்கிழமை காட்டுத்தீ ஏற்பட்டு அடுத்தடுத்து பரவியது. இதனை அடுத்து வீடுகள் பல தீயில் கருகின. வேகமுடன் வீசிய காற்றால் காட்டுத்தீ பல்வேறு பகுதிகளுக்கும் பரவி சூறாவளி தீ ஏற்பட்டது. ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல்வேறு கட்டிடங்களும் சேதமடைந்தன.
வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தப்பி வேறு இடங்களுக்கு சென்றனர். 3 ஆயிரம் பேருக்கு வீடுகளில் மின்சார வசதி தடைப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் உடனடியாக மீட்பு பணிகளில் இறங்கி வீடுகளில் உள்ளவர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களில் மீட்பு பணியின்போது 2 தீயணைப்பு வீரர்கள் தீயில் சிக்கி பலியாகி உள்ளனர். சுமார் 44450 ஏக்கர் பரப்பளவில் தீப்பிடித்து எரிவதால், அதனை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.
சாஸ்தா கவுண்டி பகுதியில் இருந்து மீட்கப்பட்ட சுமார் 30 ஆயிரம் மக்களுக்கு தேவையான உணவு வழங்கவும், பண்ணைகளில் இருந்து மீட்கப்பட்ட கால்நடைகளை பராமரிக்கவும் மத்திய அரசின் அவசர உதவி தேவை என்று கவர்னர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply