கருணாநிதியின் உடல்நலம் – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நலம் விசாரித்தார்

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் வருகை தந்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். அங்கு, ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களிடம் அவர் நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அவர் கேட்டறிந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply