மன்னார் மடு தேவாலயத்தில் ஜனாதிபதி வழிபட்டார்
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று முற்பகல் மன்னார் மடு தேவாலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு இறையாசீர் பெற்றுக்கொண்டார்.மன்னார் மறை மாவட்ட ஆயர் அதிவண இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் மடு தேவாலயத்தின் நிர்வாகி அருட் தந்தை எமிலியானுஸ்பிள்ளை அடிகளார் ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்றதுடன் கொழும்பு பேராயர் காடினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட அருட் தந்தைகள் இறைவழிபாடுகளை மேற்கொண்டு ஜனாதிபதிக்கு நல்லாசிகளை வழங்கினர்.
ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னமொன்று வழங்கிவைக்கப்பட்டது தொடர்ந்து தேவாலயத்தை சுற்றிப் பார்வையிட்ட ஜனாதிபதி அங்கு இடம்பெற்றுவரும் அபிவிருத்திப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அனைத்து இனங்களையும் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான மக்கள் தேவாலயத்திற்கு வருகைதந்திருந்ததுடன் அம்மக்களுடனும் ஜனாதிபதி சுமுகமாக கலந்துரையாடினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply