பொது நலவாய செயலாளர் நாயகம் நாளை இலங்கை விஜயம்

பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லன்ட் நாளை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.செயலாளரின் குறித்த விஜயத்தில் அவர் இலங்கையில் நான்கு நாட்களுக்கு தங்கியிருக்கவுள்ளார்.இவர் 2016 ஏப்பிரல் மாதம் செயலாளர் நாயகமாக பதவியேற்றதன் பின்னர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.

நாளை 1 ஆம் திகதி, செயலாளர் நாயகம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரபனவையும் சந்திக்க உள்ளார்.

ஆகஸ்ட் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள அவரது கூட்டங்கள் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம; மாகாண சபைகள்,உள்ளூராட்சி மற்றும் விளையாட்டு அமைச்சர் பைசர் முஸ்தபா, இளைஞர் விவகார, திட்ட முகாமைத்துவ மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக, பொது நிர்வாகம் முகாமைத்துவம் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மந்தும பண்டார, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் ஆகியோரை உள்ளடக்கிதாகயிருக்கும் என்று இவரது விஜயம் தொடர்பாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயலாளர் நாயகத்தின் கூட்டங்களின் பிரதான நோக்கம் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துதல் 2018 ஆம் ஆண்டில் பொதுநலவாய அரசாங்க தலைவர்களுடன் இலண்டனில் இடம்பெற்ற கூட்டத்தில் (CHOGM) உடன்பட்ட முடிவுகளை நிறைவேற்றுவதில் விரிவான ஆதரவையும் ஓத்துழைப்பையும் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஆய்வு செய்வதாகும்.

இதேவேளை இந்த கலந்துரையாடல்கள் பொதுநலவாய நீலச் சாசனத்தினை நடைமுறைப்படுத்துவதனையும் உள்டளடக்கியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply