உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் மத்தலயில் தரையிறக்கம்
உலகின் இரண்டாவது மிகப்பெரிய சரக்கு விமானமான அன்டனோவ் ஏஎன்-124 ரஸ்லன் (Antonov An-124 Ruslan) மத்தல விமானநிலையத்தை வந்தடைந்துள்ளது.எரிபொருள் மீள்நிரப்புவதற்காகவும், விமான ஊழியர்கள் ஓய்வெடுப்பதற்காகவும் குறித்த விமானம் மத்தலயில் தரையிறங்கியதாக விமானநிலைய முகாமையாளர் உபாலி கலன்சூரிய தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் இருந்து நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்த குறித்த விமானம் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply