அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி ஏவுகணை தயாரிக்கிறது வட கொரியா

அமெரிக்காவின் எச்சரிக்கையை யும் மீறி, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கக் கூடிய ஏவுகணை களை வட கொரியா தயாரித்து வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடு களின் எதிர்ப்புகளை பொருட்படுத் தாமல் வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், நவீன ஏவுகணைகளையும் தயாரித்து வந்தது. மேலும், தமது ராணுவ வலிமையை பறைசாற்றும் விதமாக அவ்வப்போது ஏவுகணை சோதனைகளையும், அணு ஆயுத சோதனைகளையும் நடத்தி வந்தது.

இதனையடுத்து, வட கொரியா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித் தது. மேலும், அணு ஆயுதங்களை அழிக்காவிட்டால் வட கொரியா மீது ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. அதேசமயத்தில், இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வும் தாம் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.

முதலில், ட்ரம்ப்பின் அழைப்பை ஏற்க மறுத்த கிம் ஜாங் உன், பின்னர் இதற்கு ஒப்புக் கொண்டார். அதன்படி, டொனால்ட் ட்ரம்பும், கிம் ஜான் உன்னும் சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சர்வ தேச முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பின்போது, வட கொரியாவில் உள்ள அணு ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகள் ஆகியவற்றை முற்றிலுமாக அழிக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக்கொண்டார். அதற்கு பிரதிபலனாக, வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க அமெரிக்காவும் ஒப்புக் கொண்டது.

இந்த நிலையில், வட கொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரித்து வருவதாக அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ தெரிவித்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் நேற்று செய்திகள் வெளியாகியுள்ளன. வட கொரியா தலைநகரான பியாங்யங் அருகே அமைந்துள்ள சேனம்டாங் பகுதியில் இந்த ஏவுகணைகள் தயாரிக்கும் பணி கள் ரகசியமாக நடைபெற்று வரு வதாகவும், அமெரிக்காவின் செயற்கைக்கோளின் புகைப் படங்களின் மூலமாக இது தெரியவந்துள்ளதாகவும் சிஐஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த ஏவுகணை களானது முழுக்க முழுக்க திரவ எரிவாயு மூலம் இயங்கக்கூடிய வகையில் பிரத்யேகமாக வடி வமைக்கப்பட்டு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply