வெளிநாட்டு நிறுவனங்களே! அரச சொத்துக்களை வாங்க வேண்டாம், நாம் வந்தால் பறிபோகும் : மஹிந்த
_வெளிநாட்டு நிறுவனங்களே ! இந்த அரசாங்கம் விற்பனை செய்யும் எமது நாட்டின் அரச சொத்துக்களை வாங்க வேண்டாம் எனவும், அவ்வாறு வாங்கினால் எமது அரசாங்கம் வந்தவுடன் அதனை மீள்பரிசீலனை செய்ய வேண்டி ஏற்படும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்தார். கூட்டு எதிர்க் கட்சியினரால் அரசாங்கத்துக்கு எதிராக நேற்று முன்னெடுக்கப்பட்ட ஜனபல சேனா எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் கூறினார்.__
இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு உள்ள நிலத்தை இந்த அரசாங்கம் வெளிநாட்டுக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. விற்பனை செய்தும் உள்ளது. இவற்றை நாம் மீண்டும் பெற வேண்டியுள்ளோம். இதனை தேசத்தின் பெயரால் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply