புலிகளின் பிடியில் எஞ்சியிருக்கும் சிவிலியன்களை மீட்டு குடியமர்த்த மேலும் ஆயிரம் ஏக்கர் நிலம் தயார்
புலிகளின் பிடியில் சிக்கி எஞ்சி இருக்கும் மக்களையும் விடுவித்துத் தற்காலிகமாகக் குடியமர்த்தவென வவுனியாவில் மேலும் ஆயிரம் ஏக்கர் நிலம் தயார் செய்யப்பட்டிருப்பதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ். பி. திவாரட்ன நேற்றுத் தெரிவித்தார்.அதேநேரம், புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட எவரும் மரங்களின் கீழ் தங்க வைக்கப்படவில்லை. சகலருக்கும் தங்குமிட வசதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறுகிய காலத்திற்குள் பெருந்தொகையன மக்களை புலிகளின் பிடியிலிருந்து விடுவித்து வவுனியாவில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இருந்தும் இற்றைவரையும் இவர்கள் மத்தியில் எந்தவொரு தொற்று நோயுமே தலைதூக்க முடியாதளவுக்குச் சிறந்த சுகாதார சேவையை அரசாங்கம் வழங்கி வருவதாகவும் அவர் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இச்செய்தியாளர் மாநாட்டில் கலந்து புலிகளின் புடியிலி ருந்து விடுவிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் மேற் கொள்ளும் நலன்புரி நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் கூறுகையில் :- வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் நான்கு நிவாரணக் கிராமங்களிலும் 16 நலன்புரி நிலையங்களிலுமாக புலிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட ஒரு இலட்சத்து 87 ஆயிரத்து 840 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேநேரம், யாழ்ப்பாணத்தில் 11 ஆயிரத்து 150 பேரும், புல்மோட்டையில் 5 ஆயிரத்து 560 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புலிகளின் பிடியில் சுமார் இருபதினாயிரம் பேர் சிக்குண்டு எஞ்சியுள்ளனர்.
அவர்களையும் மீட்டெடுத்து தற்காலிகமாகத் தங்கவைக்கவென வவுனியாவில் ஆயிரம் ஏக்கர் நிலத்தை சுத்தப்படுத்தி, தயார்படுத்தியுள்ளோம். இது நாலாவது வலயமென அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு வவுனியாவில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கென 17 ஆரம்ப சுகாதார சேவை நிலையங்கள் தஞ்சமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கண்ணாடி இழைப் படகுகளைப் பயன்படுத்திய இந்த மக்கள் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ளனர்.
புல்மோட்டையை நோக்கி வந்து கடற்படையினரிடம் தஞ்சமடைந்த 7 பொது மக்களில் 4 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதுவரை புலிகளிடமிருந்து தப்பி வந்த மற்றும் மீட் டெடுக்கப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கை ஒரு இல ட்சத்து 86 ஆயிரத்து 300 ராக அதிகரித்துள்ளதாக பிரிகேடி யர் மேலும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply