சர்ச்சைக்குரிய உரையின் பின்னர் விஜயகலா எம்.பி. இன்று பாராளுமன்றத்தில்

எல்.ரி.ரி. ஈ. அமைப்பு தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஷ்வரன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நேற்று பாராளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளார். நேற்று அவர் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பின்னாச எம்.பி.யாக அமர்ந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றம் வந்தவர் ஆவார்.

இவர் சர்ச்சைக்குரிய உரையை நிகழ்த்திய பின்னர், யாழ். மாவட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சகல அபிவிருத்தி நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மற்றும் அமைச்சர்களுடன் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply