ஹக்கீம், மனோ, ரிஷாட் ஆகியோரின் கருத்துக்கு பிரதமர் இணக்கம்

மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறைமையின் கீழ் நடாத்துமாறு அமைச்சர்களான ரவுப் ஹக்கீம், மனோகணேசன், ரிஷாட் பத்தியுத்தீன் ஆகியோர் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாகவும், இதனால் புதிய முறைமையை ஏற்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள அமைச்சர்கள் சிலரும் புதிய முறைமைக்கான தமது எதிர்ப்பை பிரதமருக்கு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் பாராளுமன்ற விவாதம் ஒன்றை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்துவது என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்திலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஜாதிக ஹெல உறுமய கட்சி என்பன புதிய தேர்தல் முறைமையை கொண்டு வர வேண்டும் என்ற தீர்மானத்தில் உள்ளன.

விரைவாக தேர்தலை நடாத்துவதற்கு எந்த முறைமையினால் முடியுமோ அதற்கு ஆதரவு வழங்குவதாக கூட்டு எதிர்க் கட்சி தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.

எதிர்க் கட்சியுடன் இணைந்தாவது பழைய தேர்தல் முறைமையை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக அமைச்சர் ரவுப் ஹக்கீம் வருடாந்த கட்சி மாநாட்டில் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply