வடக்கில் இன்னும் 12 வீதமான காணிகளே விடுவிக்கப்படவுள்ளன : ஜனாதிபதி
வடக்கில் படையினர் வசமிருந்த 88 வீதமான காணிகள் தற்பொழுது விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மீதான 12 வீத காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழில் தெரிவித்துள்ளார்.
யாழ். மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் மீள் நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு வைபவம் நேற்று(22) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தவாரம் கொழும்பில் நடைபெறவுள்ள வடக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்திற்கு கட்சி, நிறம், பிரதேச பேதமின்றி அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply