பாரிஸ் அருகே கத்தி தாக்குதல்: பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு – ஐ.எஸ். அமைப்பு பொறுப்பு ஏற்றது
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் 2015-ம் ஆண்டு நவம்பர் 13-ந் தேதி பயங்கரவாதிகள் கொடூரமான தாக்குதல்கள் நடத்தினர். அதில் 130 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய 7 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பிரான்ஸ் பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஆளாவது தொடர்கிறது.
இந்த நிலையில் அங்கு பாரீஸ் புறநகரில் உள்ள ஒரு தெருவில் ஒருவர் நேற்று காலை 3 பேரை கத்தியால் சரமாரியாக குத்தி ரத்த வெள்ளத்தில் வீழ்த்தினார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. உடனே போலீஸ் படை அவரை சுற்றி வளைத்து சுட்டுக்கொன்றது.
அவர் கத்தியால் குத்தியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். அவர்கள், அவரது தாயும், சகோதரியும் ஆவர் என தகவல்கள் கூறுகின்றன.
இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இந்த கத்திக்குத்து சம்பவத்துக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்று உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply