ஜனாதிபதி செயலணியில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பங்கேற்பர்:செல்வம் அடைக்கலநாதன்

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பிலான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வடக்கி கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் பங்கேற்பதானது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் எவ்விதமான இடையூறும் இருக்க முடியாது. தமிழ் மக்களின் முழு ஆதரவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி செயலணியில் பங்கு பற்றுமென அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டம் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அக்கூட்டத்தில் பங்கேற்க கூடாதென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடத்தில் கடிதம் மூலம் கோரியிருந்தார். எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply