கிளிநொச்சி வைத்தியசாலையில் குருதி சுத்திகரிப்பு நிலையம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் முதற்தடவையாக குருதி சுத்திகரிப்பு சிகிசை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.நேற்று முற்பகல் 11 மணிக்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் பிரதம அதிதீயாக கலந்துகொண்டு குருதி சுத்திகரிப்பு நிலையத்தினை திறந்து வைத்தார்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வரலாற்றில் இதுவரை காலமும் குருதி சுத்திகரிப்பு நோயாளிகள் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் வைத்தியசாலைகளுக்கே அனுப்பி வைக்கப்பட்டனர்.

வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் உள்ளிட்ட பலரின் கூட்டு முயற்சியினால் வட மகாகாணத்தில் இறுதியான குருதி சுத்திகரிப்பு நிலையமாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இந் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் குருதி சுத்திகரிப்புக்குட்படும் நோயாளிகள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் தங்களது சிகிசையை பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply