பயனாளிகளின் மேம்பாட்டுக்காக எட்டு கிராமிய பாலங்கள் : அமைச்சர் சஜித் பிரேமதாச
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மாதிரி கிராமங்கள் பயனாளிகளின் மேம்பாட்டுக்காக எட்டு கிராமிய பாலங்களை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் குறைந்த கிராமங்களில் ஆரம்பிக்கப்பட்ட மாதிரிக் கிராமங்களின் வீட்டுப் பயனாளிகளுக்கு நாகரீக பொது வசதிகளை இலகுவாக அடையக் கூடிய வகையில் ரம்புகவெள வெலிக்கந்த ? ஊடாக பாலம் முவான்வெள, வீரவில ஆறு ஊடான பாலம், பன்னேகமுவ மற்றும் அபெபுர ஊடாக தியபெதிய பாலம் ,அம்பலாங்தொட்ட லியங்கஸ்தொட்ட மற்றும் பெதிகன்தொட்ட ஊடான பாலம், தனமல்வில வீதியில் மலல ஆறு, ரத்முத்துவெள பாலம், இறப்பர் வத்த மற்றும் உடுவில இடையிலான பாலம், கட்டுவன கெசல்வத்த பாலம், மற்றும் லுணுகம்வெர தெற்கு ஊடான பாலம், ஆகிய எட்டு கிராமிய பாலங்கள் நகமுபுரவர என்ற வேலைத் திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ளன.
இதற்காக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply