தீவிரவாத செயற்பாட்டுடன் தொடர்புடைய இலங்கையர் அவுஸ்திரேலியாவில் கைது

பயங்கரவாத குற்றச்சாட்டில் இலங்கை பிரஜை ஒருவர் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.25 வயதுடைய இளைஞர் ஒருவரே அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.அவருடைய மாணவர் விசா செப்டம்பர் மாதம் காலாவதியாக உள்ளதாகவும், சிட்னியிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருப்பவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல்களுக்கான திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும், அது தொடர்பான ஆவணம் ஒன்று அவரிடம் இருந்துள்ளதாகவும் அந்த இளைஞர் மீது அவுஸ்திரேலிய பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும் கைது செய்யப்பட்ட அவருக்கு எதிராக எவ்வித பயங்கரவாத குற்றச்சாட்டுக்களும் இதற்கு முன்னர் சுமத்தப்படவில்லை என்றும் அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply