ஞானசார தேரரை வெளியே எடுக்க மற்றுமொரு முயற்சி :தேரரின் சட்டத்தரணி

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய சிறைத் தண்டனை மற்றும் மேன் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு என்பவற்றுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் விசேட மேன்முறையீடொன்றை முன்வைக்கப்போவதாக தேரரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரின் தீர்ப்புக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு நேற்று வெளியானதையடுத்து இதனைக் கூறியுள்ளார்.

மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனு நீராகரிக்கப்பட்டால் அதனை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஞானசார தேரருக்கு எதிரான தீர்ப்பு கடந்த ஆகஸ்ட் 8 ஆம் திகதி நீதிமன்றத்தினால் வெளியிடப்பட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக 42 நாட்களுக்குள் முறைப்பாட்டை முன்வைக்க வேண்டியிருந்தது. தற்பொழுது மேன் முறையீட்டுக்கு 20 நாட்களே செலவாகியுள்ளன.

தேவையான சகல ஆவணங்களையும் தயார் செய்து கொண்டு அடுத்த வாரத்துக்குள் உயர் நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் தேரரின் சார்பில் ஆஜராகியுள்ள சட்டத்தரணி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply