வவுனியா மனிக்பாம் நிவாரண கிராமங்களில் 200 விடுதலைப்புலிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளனர்
மோதல் இடம்பெறும் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா மனிக்பாம் நிவாரண கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களிலிருந்து விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர்கள் என தெரிவிக்கப்படும் 200 பேர் இராணுவத்தினரிடம் சரணடைந்திருப்பதாக பாதுகாப்பு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டுள்ள இவர்களுக்கு புனர் வாழ்வளிக்கப்படும் என்றும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இளைஞர்களில் ஒரு தொகுதியினர் நாட்டின் தென்பகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 15 பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்ட இவர்கள் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காகவே அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
கடந்த வாரம் இந்த குறிப்பிட்ட முகாமுக்கு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விஜயம் செய்து நிலைமைகளை நேரில் கண்டறிந்த பின்பே இவ்வாறு பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் நாட்டின் தென்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள் என்றும், இவ்வாறு இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டமை குறித்து, இந்த நிவாரண முகாம்களுக்கு பொறுப்பான சிவில் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply