யுத்தக் குற்றங்களில் ஈடுபட்ட’ இராணுவத்தை காப்பாற்ற புதிய திட்டத்துடன் ஐ.நா. செல்லும் மைத்திரி
யுத்தக் குற்றங்களில் ஈடுபட்ட’ இலங்கை இராணுவத்தை காப்பாற்றம் திட்டம் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.நிவித்திகலவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீக்கும் திட்டம் ஒன்றை எதிர்வரும் 24ஆம் திகதி ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார் .
அவர் மேலும் பேசுகையில், ”இந்த திட்டம் குறித்து சிலர் விமர்சனம் செய்வார்கள். ஆனால், இது ஐ.நாவில் சமர்ப்பிக்கப்படுவது முக்கியம் என்று உணர்கிறேன்.
எதிர்வரும் 24ஆம் திகதி ஐ.நா பொதுச்சபையில் நிகழ்த்தவுள்ள உரையின் போது, இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை இல்லாமல் செய்யும் தேவை உள்ளது.
விடுதலைப் புலிகள் தொடர்பாக அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஐ.நா கூட்டத்தில் விபரித்துக் கூறப்படும்.
ஐ.நாவுடனான கலந்துரையாடல்கள் மட்டுமே, இலங்கை குறித்த மனித உரிமைகள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு உள்ள ஒரே வழியாகும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply