தென்கொரியாவும், வட கொரியாவும் இணைந்து அமைத்த புதிய அலுவலகம் திறப்பு
கொரியப்போரைத் தொடர்ந்து பகைவர்களாக விளங்கி வந்த தென்கொரியாவும், வட கொரியாவும் இப்போது தங்கள் பகைமை மறந்து நல்லுறவை பராமரிக்கத் தொடங்கி உள்ளன. வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்-ம் ஏற்கனவே இரு முறை சந்தித்து பேசி உள்ளனர்.
வரும் செவ்வாய்க்கிழமையன்று தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் 3 நாள் பயணமாக வடகொரியாவுக்கு செல்கிறார். அப்போது அவர் கிம் ஜாங் அன்னுடன் மூன்றாவது சுற்று பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். இந்த நிலையில், இரு கொரியாக்கள் கூட்டு தொடர்பு அலுவலகம் ஒன்றை வடகொரியாவின் கேசாங் நகரில் நேற்று திறந்தன.
இந்த விழாவில் தென்கொரிய ஒருங்கிணைப்புத்துறை மந்திரி சோ மியோங் கியோன் பேசும்போது, “வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் இன்று (நேற்று) தொடங்கி உள்ளது. தென்கொரியாவும், வடகொரியாவும் இணைந்து உருவாக்கி உள்ள புதிய சமாதான சின்னமாக இந்த அலுவலகம் திகழும்” என குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply