அவமதிப்பு பேச்சு – 4 வாரத்துக்குள் ஆஜராக எச்.ராஜாவுக்கு ஐகோர்ட் உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டம் மெய்யப்புரத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த வாக்குவாதத்தின் போது, சென்னை உயர் நீதிமன்றம் குறித்து அவர் அவதூறாகவும், மிக மோசமாகவும் பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.
இதுகுறித்து எச்.ராஜா மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.ராஜசேகர் என்பவர் முறையீடு செய்தார். இந்த முறையீட்டை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் அமர்வு மறுத்தது.
இந்நிலையில், எச்.ராஜா மீதான புகாரை தாமாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்த நீதிபதி சி.டி. செல்வம் அமர்வு, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை நேரில் வந்து ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
4 வாரத்துக்குள் ஏதாவது ஒரு நாளில் எச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நீதிபதி சி.டி.செல்வம் அடங்கிய அமர்வு ஆணை பிறப்பித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply