மீட்கப்பட்ட சகலருக்கும் வைரஸ் எதிர்ப்பு மருந்து

புலிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டிருக்கும் சகல மக்களுக்கும் வைரஸ் எதிர்ப்பு மருந்து வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. சின்னம்மை நோய் பரவுகையைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இம் மருந்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. புலிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ள பலர் சின்னம்மை நோய்க்கு உள்ளாகியுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் முதல் இற்றைவரையும் சுமார் எட்டாயிரம் பேர் சின்னம்மை நோயார்களாக இனம் காணப்பட்டிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுக் கூறினார்.

இந்நோயாளர்களாக இனம் காணப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். இதன் பயனாக வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரணக் கிராமங்களிலும் நலன்புரி நிலையங்களிலும் இந்நோய் பரவுவது தவிர்க்கப்பட்டிருப்பதாகவும் அவ்வதிகாரி கூறினார். சின்னம்மை நோயாளர்களுக்குச் சிகிச்சை அளிக்கவென வவுனியா, பூவரசங்குளம் ஆஸ்பத்திரி தயார்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலையில் தான் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கும் சகலருக்கும் வைரஸ் எதிர்ப்பு மருந்து வழங்க அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply