பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகிறோம் : கமல்

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், சமீபத்தில் கட்சியின் உள்கட்டமைப்பை மாற்றியமைத்து உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தினார். அதன்பின்னர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். இன்றும் நாளையும் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். 

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் இன்று  நிருபர்களை சந்தித்தார். அப்போது  பாராளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி வருவதாக கூறினார்.

மேலும், அரசியல்வாதிகளிடம் மக்கள் கேள்வி கேட்பது அவர்களின் ஜனநாயக உரிமை என்று கூறிய கமல், கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும், அதற்காக தாக்குவது மாண்பு அல்ல என்று தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply