கடற்புலிகளின் இரண்டாவது தளபதி படையினரின் தாக்குதலில் பலி

கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் புலிகளின் பயங்கரவாதிகளின் மண் அணையை கைப்பற்ற கடந்த வியாழன்  படையினர் நடத்திய தாக்குதலில் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் கொல்லப்பட்டுள்ளதை படையினர் ஊர்ஜிதப் படுத்தியுள்ளனர். கடற்புலிகளின் இரண்டாவது தளபதியான செழியன் இவ்வாறு கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் கடற்படையினருடன் நடந்த பல மோதல்களில் கலந்து கொண்ட செழியன் கடந்த ஆண்டு மார்ச் 27ஆம் திகதி கடற்படையினருடன் நடந்த சண்டையில் காயமடைந்தார். இவர் புலிகளின் இயக்கத்தில் பல முக்கிய பொறுப்புக்களை வகித்தவர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply