சீனாவில் உடலுறவு காட்சிகளை லைவ் ஆக ஒளிபரப்பிய கும்பல் கைது
மாசே துங் வடிவமைத்த சித்தாந்தங்களின்படி கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்றுவரும் சீனாவில் ஆபாசப் படங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், ஆண்-பெண்களை உடலுறவில் ஈடுபட வைத்து ‘மேக்ஸ்’ என்னும் மொபைல் ஆப் மூலம் உடலுறவு காட்சிகளை சிலர் லைவ் ஆக ஒளிபரப்பி வந்தது அந்நாட்டின் சைபர் கிரைம் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
110 இடங்களில் இருந்து நேரடியாக உடலுறவு காட்சிகளை ஒளிபரப்புவதுடன் பல்லாயிரக்கணக்கான ஆபாச வீடியோக்களையும் தொகுப்பாக வைத்திருந்ததால் சுமார் 35 லட்சம் நிரந்தர வாடிக்கையாளர்களை கொண்ட இந்த ஆப்மூலம் சுமார் மூன்றரை கோடி அமெரிக்க டாலர்கள் வரை பணப் பறிமாற்றம் நடைபெற்றதும் தெரியவந்தது.
மேலும், புதிய வாடிக்கையாளர்களை இழுப்பதற்காக சுமார் 16 ஆயிரம் தரகர்களும் நியமிக்கப்பட்டுள்ளதை அறிந்த சைபர் கிரைம் போலீசார் கடந்த ஏப்ரல் மாதத்தில் இதில் தொடர்புடைய சுமார் 200 பேரை கைது செய்தனர்.
இருப்பினும், இந்த ஆப் மூலம் தொடர்ந்து சமூக வலைத்தளங்களின் வழியாக ஆபாச காட்சிகள் ஒளிபரப்பானதை கண்டு அதிர்ச்சி அடைந்த சீன அதிகாரிகள் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் கம்போடியா நாட்டில் உள்ள ‘சர்வர்’ மூலம் இவை பதிவேற்றம் செய்யப்படுவதை கண்டுபிடித்தனர்.
இதை தொடர்ந்து கம்போடியா அரசின் உதவியுடன் அந்த ‘சர்வர்’ முடக்கப்பட்டு, இதில் தொடர்புடைய 18 பேர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டதாக சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள செஜியாங் மாகாண போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply