உடல்நலக்குறைவால் காலமானார் வியட்நாம் அதிபர்
வியட்நாம் நாட்டின் ராணுவ மருத்துவமனையில் தீவிர உடல்நலக்குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் அந்நாட்டின் அதிபர் ட்ரான் டாய் குவாங். இவர் தனது உடல்நலக்குறைவு காரணமாக வெளிநாடுகளிலும் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் வியட்நாம் அதிபர் ட்ரான் டாய் குவாங் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 61 வயதான அதிபர் ட்ரான் டாய் குவாங் 2016-ம் ஆண்டு ஏப்ரல் 2 முதல் வியட்நாமின் அதிபராக பதவிவகித்து வந்தார்.
வியட்நாமின் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ட்ரான் டாய் குவாங், சட்டப்படிப்பில் பி.எச்.டி பட்டம் பெற்றவர் ஆவார்.
இவர் கடந்த 2006 முதல் 2011 வரை மக்கள் பாதுகாப்புத்துறையின் துணை மந்திரியாகவும், பின்னர் 2011 முதல் 2016 வரை அதே துறையில் மந்திரியாகவும் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply