பொலிஸ் மா அதிபரை பதவி நீக்க அரசியலமைப்புச் சபைக்கே முடியும் : அமைச்சர் மத்தும பண்டார

பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக கிடைக்கப்பெற்றுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கண்டறிவதற்காக மூவரடங்கிய உயர்மட்டக் குழு நியமிக்கப்பட்டிருப்பதாகவும், இக் குழு முன்வைக்கும் விசாரணை அறிக்கையின் அடிப்படையிலேயே பொலிஸ் மாஅதிபர் தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படுமென்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கும், விலக்குவதற்குமான அதிகாரம் அமைச்சருக்கன்றி அரசியலமைப்புச் சபைக்கே உண்டு என்றும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் தொடர்பிலான குற்றச்சாட்டுக் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரிடம் வினவிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply