ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்கா செல்கிறார்

ஐக்கிய நாடுகள் சபையின் 73வது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு அமெரிக்கா புறப்பட்டுச் செல்ல உள்ளார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் நான்காவது முறை இதுவாகும்.

ஐக்கிய நாடுகள் அமைப்புடன் உலகில் உள்ள சகல மக்களையும் நெருங்கி வர செய்தல், நீதி, அமைதி வலுவான சமூகத்தை ஏற்படுத்த உலக தலைவர்களின் கூட்டான பொறுப்பு என்ற தலைமையின் கீழ் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டம் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

பிரதான கூட்டத் தொடர் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளதுடன் அன்றைய தினம் பிற்பகல் இலங்கை ஜனாதிபதி பொதுச் சபையில் உரை நிகழ்த்த உள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு இலங்கைக்கு முன்வைத்துள்ள யோசனைகளை அமுல்படுத்த நிவாரணங்களை பெற்றுக்கொள்வது மட்டுமல்லாது நாட்டின் சுயாதீனத்தன்மை, தேசிய பாதுகாப்பு மற்றும் முப்படைகளின் கௌரவத்திற்கு பங்கம் ஏற்படாத வகையில் செயற்படுவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் விசேட யோசனை ஒன்றை முன்வைக்க உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கு முன்னர் கூறியிருந்தார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்துடன் நடைபெறும் உலக அமைதிக்கான நெல்சன் மண்டேலா சமாதான மாநாடு 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டில் உரையாற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.நெல்சன் மண்டேலாவின் 100 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

24 ஆம் திகதி நடைபெறும் உலக போதைப் பொருள் பிரச்சினை தொடர்பாக உலகளாவிய ரீதியில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கான விசேட சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்துக்கொள்ள உள்ளார்.

காசநோய் ஒழிப்பு தொடர்பான அமைப்பின் கூட்டத்திலும் அனைத்து நாடுகளின் அரச தலைவர்களும் கலந்துக்கொள்ள உள்ளனர். இந்த கூட்டம் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply