கடந்த அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள் மக்களை சென்றடையவில்லை: ரணில்
கடந்த அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்கள் உரிய அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படாத காரணத்தால், அதன் பெறுபேறுகள் மக்களை சென்றடையவில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (திங்கட்கிழமை) அம்பாந்தோட்டை, சூரியவெவ பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அபிவிருத்திக்காக வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட கடன்களை பயனுள்ள அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பயன்டுத்தாத காரணத்தால், நாடு இன்றும் பொருளாதார பிரச்சினைக்கு முகம்கொடுக்க நேரிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மஹிந்த நிதியமைச்சராக இருந்த காலப்பகுதியில் டொலருக்கு நிகரான ரூபாய் நான்கு மாத காலப்பகுதியில் பாரிய வீழ்ச்சியடைந்தமை தொடர்பிலும் ரணில் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply