மெஸிடோனியாவின் பெயரை மாற்றுவதா, இல்லையா என்பது குறித்து வாக்களிப்பு
மெஸிடோனியாவின் பெயரை ‘வடக்கு மெஸிடோனிய குடியரசு’ என்று மாற்றுவதா, இல்லையா என்பது குறித்து அந்த நாட்டு மக்கள் வாக்களித்து வருகின்றனர். இந்த பெயர் காரணமாக கிரேக்கத்துடன் கடந்த பல தசாப்தங்களாக நிலவும் சர்ச்சையை தீர்க்கும் நடவடிக்கையாக பெயர் மாற்றத்த்திற்கான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனடிப்படையில் இன்று காலை தொடக்கம் அங்கு வாக்கெடுப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.
நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் அங்கீகாரத்திற்கு வழிவகுக்கும் வகையில், மேற்கத்திய சார்பு அரசாங்கத்தால் இந்த பெயர் மாற்றம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த ஜூன் மாதத்தில் மாசிடோனியாவிற்கும் கிரேக்கத்திற்கும் இடையில் ஏற்பட்ட ஒரு உடன்பாட்டிற்கான வாக்கெடுப்பாக இது கருதப்படுகிறது.
1991 ஆம் ஆண்டில் யூகோஸ்லாவியாவில் இருந்து பிரிந்துவிட்டதால் மேசிடோனியாவிக்கு பிரதான மேற்கத்திய அமைப்புகளில் இணைவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போயுள்ளது.
கிரேக்க நாட்டின் மாகாணங்களில் ஒன்றாக இருக்கும் மஸிடோனியாவின் பெயர் வடக்கில் அயல்நாட்டின் பெயரோடும் ஒத்துப்போவதால் அந்த நாடுகளுக்கிடையில் கடந்த பல தசாப்தங்களாக சர்ச்சைகள் நிலவிவந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply