யுத்த வெற்றியை உரிமை கோரும் ஜனாதிபதி போர் குற்றச்சாட்டையும் பொறுப்பேற்க வேண்டும்: விமல்

யுத்த வெற்றியை உரிமை கோரும் ஜனாதிபதி போர் குற்றச்சாட்டின் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.கடுவலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

“விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் கடைசி இரண்டு வாரங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் நாட்டில் இருக்கவில்லை என்றும், தானே யுத்தத்தை வெற்றிகொண்டதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது கூறி வருகின்றார்.

இவ்வாறு ஜனாதிபதி யுத்த வெற்றியை உரிமை கோருவதை போன்று யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை ஆகியவற்றுக்கான பொறுப்பையும் ஜனாதிபதி மைத்திரி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும் இராணுவத்தையும் போர்க் குற்றத்திலிருந்து விடுவிக்கும் நடவடிக்கையையும் ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டும்” என விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply