கடல்வழியாக புலிகள் தப்பி செல்ல முடியாது : கடற்படை பேச்சாளர் மகேஸ் கருணாரத்ன
புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட எந்தவொரு புலி உறுப்பினரும் கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதற்கான வழிகள் எவையும் இல்லை என கடற்படை தெரிவித்துள்ளது. கடற்படையினர் பருத்தித்துறை தொடக்கம் முல்லைத்தீவு வரை விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். இதற்கென அதி நவீன தொழில் நுட்பத்தையும், சக்திவாய்ந்த ராடர் கருவிகளையும் பயன்படுத்துவதாக கடற்படை பேச்சாளர் மகேஸ் கருணாரத்ன தெரிவித்துள்ளார். வேகமாக சென்று தாக்கக்கூடிய கப்பல்களும் இக்கடற்பிராந்தியத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்டுள்ளன. புலிகளுக்கு கடல் வழியாக தப்பிக்க முயற்சிக்கும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply