ஈரானில் மது குடித்த 27 பேர் பலி
ஈரானில் 1979-ம் ஆண்டு முதல் மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது. இதனை மீறி மது குடிப்பவர்களுக்கு கசையடி மற்றும் அபராதம் விதிக்கப்படும்.இருந்த போதிலும் அந்நாட்டு மக்கள் கள்ளச்சந்தையில் கிடைக்கும் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட மற்றும் வீட்டிலேயே தயார் செய்யப்பட்ட மதுபானங்களை வாங்கி குடிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.
இந்த நிலையில் ஹோர்மோஸ்கான், வடக்கு கோர்சன், அல்போர்ஸ், கோஹிலயா மற்றும் போயர் அஹ்மத் ஆகிய மாகாணங்களில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களை வாங்கி குடித்த 27 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மேலும் 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக மதுபானங்களை தயார் செய்து, விற்பனை செய்ததாக கணவன்-மனைவி உள்பட 3 பேரை ஈரான் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply