இந்தோனேசிய அனர்த்தத்திற்கு இலங்கை ஜனாதிபதி அனுதாபம்

இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள பாரிய இயற்கை அனர்த்தத்தில உயிரிழந்தவர்களுக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் தெரிவித்துள்ளார். தமது உறவுகளை இழந்து தவிக்கும் அந்நாட்டு மக்களுக்கு அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் கடந்த 28ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் சிக்கி 800இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டு ஜனாதிபதி ஜொகோ விடோடோவிற்கு இலங்கை ஜனாதிபதி அனுப்பிவைத்துள்ள செய்தியில், தமது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

குறித்த அனர்த்தத்தை கேள்வியுற்று தாம் அதிர்ச்சியடைந்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த இக்கட்டான சூழ்நிலையில இந்தோனேசிய மக்களுடன் இலங்கையும் கைகோர்த்துள்ளதென சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, பாதிப்பிலிருந்து விரைவில் மீண்டெழுந்து, நாட்டைக் கட்டியெழுப்பும் சக்தி அந்நாட்டு அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் கிடைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply